உள்ளடக்கத்திற்குச் செல்க
உள்நுழைக


டிசைனுக்குத் தயாராக உள்ள 3D பொருட்கள், இப்போது Shutterstock இல் உள்ளன

PixelSquid இன் விரிவான நூலகத்திலிருந்து உயர்தர 3D பொருட்களை அணுகி அவற்றை நேரடியாக உங்கள் 2D டிசைன்ஸில் வைக்கவும்—டிசைன் செய்யும் திறன்கள் தேவையில்லை.

Astronaut Gif
உங்கள் 2D திட்டப்பணிகளுக்கு 3D பாப் கொடுங்கள் - அதைச் செய்யும் விதம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:


1. சரியான கோணத்திற்கு 3D மாடலைச் சுழற்றுங்கள்

பொருட்களைச் சுழற்றுவதற்கு கிளிக் செய்து இழுக்கவும், நீங்கள் விரும்பும் கோணத்தைக் கண்டறியவும். அது சரியாக இருக்கும்போது, ​​உங்களுக்குத் தேவையான கோப்பு வகையைத் தேர்ந்தெடுத்து, பதிவிறக்குக என்பதைக் கிளிக் செய்க.

2. உங்கள் டிசைனில் 3D பொருளைச் சேர்க்கவும்

நீங்கள் பதிவிறக்கம் செய்யும் 3D பொருட்கள் PNG ஆகச் சேமிக்கப்படும் போது எந்த கிராஃபிக் டிசைன் திட்டத்திலும் பயன்படுத்தப்படலாம். (Photoshop பயனர்கள் PSD வடிவத்தில் கோப்புகளைப் பதிவிறக்கம் செய்ய விரும்பலாம்.) உங்கள் படத்தை இறக்குமதி செய்து, அதற்குரிய இடத்தில் வைத்தால் நமது பணி முடிந்தது.

உயர்தர 3D பொருட்களின் சேகரிப்புகளை ஆராய்க

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்:


ஒரு 3D பொருள் என்றால் என்ன?

PixelSquid 3D பொருட்கள் உயர்தர, முன்பே-ரெண்டர் செய்யப்பட்ட 3D உடைமைகளாகும், அவை குறிப்பாக 2D டிசைன்ஸ் மற்றும் காட்சித் திட்டப்பணிகளில் பயன்படுத்துவதற்காக டிசைன் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பொருட்கள் தொழில்முறைக் கலைஞர்களால் கிரியேட் செய்யப்பட்டு, விவரங்களுக்கு உன்னிப்பாகக் கவனம் செலுத்தப்பட்டு, ரெண்டர் செய்யப்படுகின்றன. இதன் விளைவாக மரச்சாமான்கள், வாகனங்கள், விலங்குகள், தாவரங்கள், தொழில்நுட்பப் பொருட்கள், கட்டிடக்கலை வடிவமைப்புக் கூறுகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பரந்த அளவிலான பொருட்களில் ஃபோட்டோவில் இருப்பது போன்ற தத்ரூபமான உருவகம் கிடைக்கிறது. 3D மாடலிங் நிபுணத்துவம் இல்லாமல் உங்கள் சூழலுக்கு ஆழத்தையும் யதார்த்தத்தையும் கொண்டு வர அந்தப் பொருளின் ஒற்றைக் கோணத்தின் 2D படத்தை நீங்கள் சுழற்றலாம் மற்றும் எளிதாகப் பதிவிறக்கம் செய்யலாம் மற்றும் அதை உங்கள் டிசைன்ஸில் வைக்கலாம்.


ஒரு 3D பொருளுக்கும் 3D மாடலுக்கும் என்ன வித்தியாசம்?

PixelSquid ஆனது 3D பொருட்களை வழங்குகிறது, அவை 200 க்கும் மேற்பட்ட கோணங்களில் இருந்து முன்பே ரெண்டர் செய்யப்பட்டவையாகும். அவை அடுக்கு PSD அல்லது வெளிப்படையான PNG ஆகப் பதிவிறக்கம் செய்யப்படலாம். பல ஃபோட்டோ திருத்தக் கருவிகளில் இந்த 3D பொருட்களை நீங்கள் பயன்படுத்தலாம்.

மாற்றாக, 3D மாடல்கள் வடிவியல், பொருட்கள், மேற்புற பரப்புகள், லைட்டிங் ரிக்குகள், கேமராக்கள் போன்றவற்றைக் கொண்டிருக்கும். அந்த 3D மாடல்களைத் திறந்து பயன்படுத்த, 3ds Max, Blender அல்லது C4D போன்ற 3D டிஜிட்டல் உள்ளடக்க கிரியேஷன் கருவி உங்களுக்குத் தேவைப்படும். நீங்கள் 3D மாடல்களை விரும்பினால், அவற்றை Shutterstock நிறுவனமான TurboSquidஇல் காணலாம்.


How are 3D objects used?

எங்களின் 3D பொருள் நூலகம் உண்மையான 3D மாடல்களில் இருந்து பெறப்பட்டது, ஆனால் அவற்றைப் பயன்படுத்த உங்களுக்குத் 3D தெரிய வேண்டிய அவசியமில்லை. வேறு எந்தப் பட விளக்கப்படத்தையும் போலவே, எங்கள் 3D பொருட்கள் உங்கள் கிரியேட்டிவ் டிசைன்களில் தனித்த படங்களாகப் பயன்படுத்தப்படலாம் அல்லது பிற வடிவமைப்பு கூறுகளுடன் இணைக்கப்படலாம். உங்கள் டிசைனின் உணர்வு மற்றும் ஸ்டைலுக்கு ஏற்றவாறு அவை தனிப்பயனாக்கப்படலாம்.


3D பொருள் மூலம் நான் என்ன கோப்பு வடிவத்தைப் பெறுவது?

Shutterstock 3D பொருட்கள் இரு பரிமாண PNG கோப்புகளாக வெளிப்படையான பின்னணியுடன் அல்லது அடுக்குகளைக் கொண்ட PSD கோப்புகளாக வழங்கப்படுகின்றன. நீங்கள் PNG களாகப் பதிவிறக்கம் செய்யும் போது, ​​எங்கள் பொருட்கள் எந்த கிராஃபிக் டிசைன் திட்டத்திலும் செயல்படும். Adobe Photoshop பயனர்கள் கோப்பை PSD ஆகப் பதிவிறக்கம் செய்ய விரும்பலாம்.


ஒரு 3D பொருளுக்கான உரிமம் எனக்கு என்ன பெற்றுத் தரும்?

ஒரு 3D பொருளுக்கான ஒரு உரிமம் அதன் அனைத்துக் கோணங்களையும் உள்ளடக்கியது! எனவே நீங்கள் முதல் கோணத்தைப் பதிவிறக்கிய பிறகு, அனைத்துக் கூடுதல் கோணங்களையும் கூடுதல் கட்டணமின்றி, ஒரு நேரத்தில் ஒரு கோணம் என மீண்டும் பதிவிறக்கம் செய்யலாம்.


3D பொருளுக்கான உரிமத்தை எவ்வாறு வாங்குவது?

எங்கள் நூலகத்தில் உள்ள மற்ற படங்களைப் போலவே, Shutterstock இன் 3D பொருட்களும் நிலையான அல்லது மேம்படுத்தப்பட்ட உரிமம் பெற்றிருக்கும், மேலும் எங்கள் ஆன்-டிமாண்ட் பேக்குகள் அல்லது சந்தா செலுத்துதல் திட்டங்களில் ஒன்றைப் பயன்படுத்திப் பதிவிறக்கம் செய்யலாம்.


3D பொருட்களுக்கு இழப்பீடு கிடைக்குமா?

ஆம், 3D பொருட்கள் உங்கள் திட்டத்தின் படி படங்களுக்கு கிடைக்கும் அதே இழப்பீடு தொகையைக் கொண்டுள்ளன.


இந்தப் படங்களை எனது திட்டப்பணிகளில் பயன்படுத்தலாமா?

நிச்சயமாக. எங்களின் அனைத்துப் பொருட்களும் உரிமைத்தொகை இல்லாத இலவச உரிமத்துடன் வருகின்றன. சில பொருட்களுக்கு எடிட்டோரியல் உபயோகக் கட்டுப்பாடுகள் உள்ளன (அடுத்த அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளைப் பார்க்கவும்)


உங்களிடம் நிறைய பிராண்டட் பொருட்கள் உள்ளன - எனது திட்டப்பணிகளில் அவற்றைப் பயன்படுத்தலாமா?

பிராண்டட் பொருட்கள் எடிட்டோரியல் உபயோகக் கட்டுப்பாடுகளுடன் வகைப்படுத்தப்படுகின்றன. தகுதியான நியூஸ், வணிகம் சாராத திட்டப்பணிகளுக்கு மட்டுமே நீங்கள் இந்தப் பொருட்களைப் பயன்படுத்தலாம்.


நான் பதிவிறக்கம் செய்த பொருட்களை எனது குழுவில் உள்ள மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாமா?

குழு திட்டத்தைக் கொண்ட அனைத்துப் பயனர்களும் தங்கள் குழு உறுப்பினர்களால் செய்யப்பட்ட பதிவிறக்கங்களை அட்டவணை வழியாகப் பார்க்கலாம். உடைமைகள் சேகரிப்புகளிலும் சேமிக்கப்படலாம், அவை இணைப்பு அல்லது மின்னஞ்சல் மூலம் மற்ற Shutterstock பயனர்களுடன் பகிரப்படலாம்.


எத்தனை முறை புதிய 3D பொருட்களை வெளியிடுவீர்கள்?

தினமும் புதிய பொருட்களை வெளியிடுகிறோம்.


எனக்குத் தேவையான பொருள் உங்களிடம் இல்லை - அதை எனக்காக உருவாக்க முடியுமா?

ஏதேனும் தவறவிடப்பட்டிருப்பதாக நீங்கள் அறிந்தால் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள், அதை எங்கள் வரிசையில் சேர்ப்போம்.


நான் அசல் 3D மாடலையும் வாங்க வேண்டும், நான் அதை வாங்கலாமா?

TurboSquid.comஇல் எங்களின் பல பொருட்கள் 3D மாடல்களாக விற்பனைக்குக் கிடைக்கின்றன. எங்கள் ஆதரவுக் குழுவைத் தொடர்பு கொண்டால், மாடல் விற்பனைக்கு உள்ளதா என்பதை நாங்கள் சரிபார்க்கலாம்.

நவம்பர் 30, 2023 நிலவரப்படி, Shutterstock.com இல் எங்களிடம் 475 மில்லியனுக்கும் அதிகமான உடைமைகள் உள்ளன.

© 2003-2025 Shutterstock, Inc.